50th Parents Day Celebration The 50 th Parents’ day celebration...
Read Moreஅறிவியல் கண்காட்சி – 2023
ஸ்பிக்நகர் மேல்நிலைப்பள்ளியில் டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் பிறந்தநாளை முன்னிட்டு ‘ஆதித்தியன் – 2023’ என்னும் தலைப்பில் அறிவியல் கண்காட்சி 13.10.23, 14.10.23 அன்று நடைபெற்றது.
விழாவினைத் தூத்துக்குடி மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளி) திரு.பிரபாகுமார் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றித்தொடங்கி வைத்தார்.
இவ்விழாவில் மாணவர்கள் அப்துல்கலாமின் உறுதிமொழியை ஏற்றனர்.
மேலும் விழாவிற்குப் பள்ளித் தலைவர் திரு.E.பாலு, பள்ளிச் செயலர் திரு.T.S.பிரேம்சுந்தர், பள்ளித்தலைமையாசிரியர் திரு.லெ.பாபு இராதாகிருஷ்ணன், ஸ்பிக் நகர் ரோட்டரி தலைவர் திரு. சுந்தரேசன், ரோட்டரி செயலர் திரு.முத்து ராஜேஷ், மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
அறிவியல் கண்காட்சியில் மாணவர்கள் மொத்தம் 290 பேர் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என முப்பாடப் பிரிவுகளில் தங்களது திறமையை வெளிப்படுத்தினர். பல்வேறு மன்றத்தின் சார்பாக ‘சரியான உணவுமுறை’ என்ற தலைப்பில் செயல்பாடுகள் மூலம் விளக்கியது மிகவும் அழகுற அமைந்தது.
மாணவர்களின் பல்வேறு ஓவியங்களும் கைவினைப்பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டன.
14.10.2023 அன்று ஸ்பிக் நகர் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சிக்கானப் பரிசளிப்பு விழா மதியம் 2.30 மணியளவில் இறைவணக்கத்தோடு தொடங்கியது.
இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக முன்னாள் தூத்துக்குடி மாவட்ட ரோட்டரி கவர்னர் திரு.L.ஷேக்சலீம் அவர்கள் கலந்து கொண்டார். மேலும் இவ்விழாவிற்குப் பள்ளித் தலைவர் திரு.E.பாலு, பள்ளிச்செயலர் திரு.T.S.பிரேம்சுந்தர், பள்ளித்தலைமையாசிரியர் திரு.L .பாபு இராதாகிருஷ்ணன், ஸ்பிக் நகர் ரோட்டரி
தலைவர் திரு. சுந்தரேசன், ரோட்டரி செயலர் திரு. முத்து ராஜேஷ், மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
சிறப்பு விருந்தினர் அவர்கள் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசு வழங்கி பாராட்டினைத் தெரிவித்தார். போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்தினைத் தெரிவித்தார்.
இறுதியில் நாட்டுப்பண்ணுடன் விழா முடிவடைந்தது.
REPUBLIC DAY CELEBRATION – 2023
REPUBLIC DAY CELEBRATION The SPIC management and SPIC Nagar Hr....
Read MoreSCIENCE EXHIBITION – 2023
அறிவியல் கண்காட்சி – 2023 ஸ்பிக்நகர் மேல்நிலைப்பள்ளியில் டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் பிறந்தநாளை முன்னிட்டு ‘ஆதித்தியன் –...
Read More